ஐடி துறையில் கலக்கும் பெண்கள்.. 10 வருடத்தில் 2 மடங்கு வளர்ச்சி..!
இந்திய ஐடி சேவை துறை வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு துறையாக மட்டும் அல்லாமல் பல கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை வேகமாக மாற்றக்கூடிய சக்தி கொண்ட துறையாக உள்ளது. இதைவிட முக்கியமாக இந்தியாவில் எந்தொரு துறையிலும் இல்லாத வகையில் ஐடி சேவை துறையில் பெண்களுக்கான பங்கீடு மிகவும் அதிகமாகவே உள்ளது.
இதே ஆய்வு தற்போது செய்யப்பட்டு உள்ளது, இதில் வியக்க வைக்கும் வகையில் 53 லட்சம் மொத்த ஊழியர்களில் சுமார் 20 லட்சம் பேர் பெண் ஊழியர்களாக உள்ளனர். கடந்த 10 வருடத்தில் இந்திய ஐடி துறையில் பெண்களின் பங்கீடு 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையின் பங்கீடு 36 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் பெண்களை அதிகளவில் பணியில் அமர்த்துவது மூலம் பெரிய பலன்களை பெற்று வருகிறது, இதன் மூலம் தொடர்ந்து அதிகப்படியான் பெண்களை பணியில் அமர்த்த கொள்கை அடிப்படையில் அதிகப்படியான மாற்றங்களை கொண்டு வர உள்ளது. குறிப்பாக தலைமை பொறுப்புகளில் அதிகப்படியான பெண்களை நியமிக்கும் முக்கியமான பணியை மேற்கொள்ள உள்ளது. இதேபோல் பல மாநிலங்களில் பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்றுவதை ஊக்குவிக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் 24 மணிநேர சேவை பிரிவிலும் பெண்களின் பங்கீடு அதிகரிக்க உள்ளது, இதேற்கான கட்டமைப்பை இந்தியா முழுவதும் கொண்டு வரும் பட்சத்தில் போதுமான பாதுகாப்பும், உதவிகளும் பெண்களுக்கு கிடைக்கும்.
மேலும் கொரோனா தொற்று காலத்தில் இருந்து இந்தியாவின் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பிரிவு பெண்கள் எண்ணிக்கை மட்டுமே மொத்த பெண் ஊழியர்களில் 50 சதவீதம் பங்கீட்டை கொண்டு உள்ளது. கூடுதலாக பெண்களை ஐடி துறைக்குள் ஈர்க்க வேண்டும், உயர் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெண்களை டார்கெட் செய்து அளிக்கப்பட உள்ளது.