செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500 படுக்கையுடன் கொரோனா சிறப்பு வார்டு
08-01-2022
செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து செய்யாறு மற்றும் வெம்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது செய்யாறு உதவி கலெக்டர் என்.விஜயராஜ், செய்யார் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் பிரியாராஜ், நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஷர்மிளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனம், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.