திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிப்பு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 34 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 66 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 5 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 26 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. மீதமுள்ள 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 6 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 25 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 34 பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் மாவட்டத்தில் உள்ள 15 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

மேலும் அதைதொடர்ந்து செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விறு, விறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இந்த தேர்தலில் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களின் விவரம் மதியம் அறிவிக்கப்பட்டது.

இதில் செய்யாறு ஒன்றியத்தில் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு என்.வி.பாபு (தி.மு.க.), பெரணமல்லூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு எல்.லட்சுமி (தி.மு.க.), புதுப்பாளையம் ஒன்றியத்தில் 11-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இ.செல்வி (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதேபோல் அனக்காவூர் ஒன்றியத்தில் கொட்டங்கரம் ஊராட்சி தலைவராக கே.லட்சுமிபதி, ஆரணி ஒன்றியம் அக்ராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏ.தாட்சாயிணி, செங்கம் ஒன்றியம் இளங்குன்னி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆர்.தேனு, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வேளானந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கே.படவேட்டாள் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக கே.முனியம்மாள், போளூர் ஒன்றியம் பொத்தரை ஊராட்சி மன்றத் தலைவராக ஏ.நாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் தென்தண்டலம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினராக சி.லட்சுமி, தென்இழுப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராக கே.ரஜினி, மேல்பள்ளிப்பட்டு ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக டி.மணிகண்டன், தாதனூர் ஊராட்சி 4-வது உறுப்பினராக பி.லட்சுமி, பெரும்பள்ளம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினராக கே.பச்சையப்பன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

கோவிலூர் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜி.குமரேசன், கடலாடி ஊராட்சி 12-வார்டு உறுப்பினர் பதவிக்கு என்.சதீஷ்குமார், தென்பள்ளிபட்டு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு டி.சுப்பிரமணி, ஆவூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆர்.லீமரோஸ், சவரபூண்டி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சி.கிருஷ்ணமூர்த்தி, சோமாசிபாடி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜி.சிவக்குமார், படவேடு ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு எம்.சின்னபையன், வெண்மணி ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு எஸ்.சரஸ்வதி, சித்தருகாவூர் ஊராட்சி 8-வது உறுப்பினர் பதவிக்கு பி.அர்ச்சுனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொண்டையன்குப்பம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜி. ஆறுமுகம், நடுகுப்பம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஜெ.சந்திரகலா, எஸ்.காட்டேரி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பி.பச்சையப்பன், சென்னவரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆர்.வெண்ணிலா, வெளியம்பாக்கம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பி. பவுலின்மேரி, அப்துல்லாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு எஸ்.மேகலா, சிறுவஞ்சிபட்டு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு என்.காசிவிஸ்வநாதன், தென்கழனி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பி.பழனி, வடஇழுப்பை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சி.விநாயகமூர்த்தி, தட்சரம்பட்டு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பி.புனிதா, அரையாளம் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு எஸ்.சங்கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *