தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மோசடி பெண் கைது
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கணேசன், 50. இவரிடம், கே.கே.நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 48, அவரது மனைவி லட்சுமி, 43, ஆகியோர், வீடு விற்க 3.15 கோடி ரூபாய் ஒப்பந்தம் போட்டுள்ளனர். முன் பணமாக, 1.15 கோடி ரூபாய் பெற்றனர். மீதமுள்ள, 2 கோடி ரூபாய்க்கு, கணேசனின் பண்ணை வீட்டை, ஒப்பந்த அடிப்படையில், வெங்கடேசன் பெயருக்கு பதிவு செய்தனர்.இதை பயன்படுத்திய வெங்கடேசன் தம்பதி, பண்ணை வீட்டின் ஆவணங்களை அடகு வைத்து, 1 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தனர்.
இது குறித்து விசாரித்த போலீசார், 2020ல் வெங்கடேசன் மற்றும் உடந்தையாக இருந்த சுரேஷ்பாவை கைது செய்தனர். இரண்டு ஆண்டு தலைமறைவாக இருந்த லட்சுமி, நேற்று கைது செய்யப்பட்டார்.