வேலம்மாள் பள்ளி மாணவன் உலக சாதனை படைத்தார்

ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 2-ம் வகுப்பு மாணவன் பிரீதிஷ் கண்ணன், சமீபத்தில்  அபாகஸ் மனவரைபட உத்தியைப் பயன்படுத்தி 3.37 வினாடிகளில்
100 எதிர்மறை மதிப்புத் தொகைகளுக்குரிய தீர்வுகளைக்  கொடுத்தமைக்காக ராபா புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.

இவ்விழாவில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி
டாக்டர் கணேசன் ,  மற்றும்  ராபா மீடியாவின்  நிறுவனர் திரு.  ராமானுஜம் பிரசன்னா
ஆகியோர்  தலைமை வகித்து உலக சாதனை படைத்த இளம் வீரருக்கு கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினர்.

மாணவரின் சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *