ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேரில் சென்று ஆய்வு செய்தார்

கோவை=11/03/2022=12=01am

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், சிங்காநல்லூர் குளம், வாலாங்குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன்குளம், குறிச்சி குளம், செல்வாம்பதி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன.

இதில் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட 7 குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குளங்களை சீரமைத்தல், மாதிரி சாலைகள் அமைத்தல், பசுமை பகுதிகளை உருவாக்குதல், சூரிய மின்சக்தி மையங்கள் அமைத்தல், ஸ்மார்ட் பெஞ்ச் அமைத்தல், நவீன காமிராக்கள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்துதல், வாகன நிறுத்தும் இடங்கள் அமைத்தல், அலங்கார வளைவுகள், நடைபாதைகள், மிதக்கும் நடைபாதைகள், இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், மிதிவண்டி பாதை, சிறு பூங்காக்கள், சிற்றுண்டி உணவகம், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், ஆகாயத்தாமரையை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மொத்தமாக ரூ.1000 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.

உக்கடம் பெரிய குளத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டன. வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பணிகள் நிறைவு பெற்ற மிதக்கும் நடைபாதைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வாலாங்குளத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். இது குறித்து மாநராட்சி பொறியாளர்கள் கூறியதாவது:

நடைபாதைகள் மற்றும் மிதிவண்டி பாதைகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாலாங்குளத்தின் கரை மற்றும் நிழல் இல்லாத பகுதிகளில் நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். வாலாங்குளம் தவிர ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகள் நடைபெறும் அனைத்து குளக்கரைகளிலும் நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

வாலாங்குளத்தில் நடைபாதைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது உள்ளது. அனைத்து பணிகளும் முடிந்த பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதே போல ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 70 சதவீதம் முடிந்து விட்டது. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *