ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் உள்ள வடுகபட்டி பஞ்சாயத்து சேர்ந்தது நாகலாபுரம். இங்கு தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த வழிவிடு முருகன் (வயது 42 ) என்பவர் நடத்தி வருகிறார். .
புத்தாண்டையொட்டி 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் இருபத்தி மூன்று அறைகள் உள்ளன காலை 8.50மணிக்கு கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்து பொருட்களை கலக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது. அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. கெமிக்கல் கலக்கும் கட்டிடத்தில் மொத்தம் ஏழு அறைகள் இருந்தன இந்த அறையில் 20 பேர் பணியாற்றி வந்தனர்.
பட்டாசு கெமிக்கல் கலக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. தொடர்ந்து அருகில் இருந்த அறைகளில் இருந்து வேலை பார்த்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என உயிர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இதுகுறித்து போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்