செய்தி: இராமேஸ்வரத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
இராமநாதபுரம், பிப்.8- ராமேஸ்வரம் தாலுகா AITUC தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. AITUC மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன்,தீவு AITUC ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.செந்தில்வேல், நிர்வாகிகள் ஜீவானந்தம், வடகொரியா, பிச்சை முனீஸ்வரன், சுகுமார், முனீஸ், வெங்கடேஸ்வரன், கருப்பையா, ஞானபிரகாசம், வாசு, மாரி,சண்முகக்கனி காளியம்மாள், பூமாரி லட்சுமி, செல்வி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் 16.2.2024 அன்று நடைபெறும் அனைத்து தொழிற்சங்க மறியல் போராட்டத்தில் திறளாக கலந்து கொள்வது எனவும்..18.2.2024 ல் மதுரையில் நடைபெறும் AITUC ஆட்டோ தொழிற்சங்க மாநில மாநாட்டில் பிரதிநிதிகள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.