செய்தி: விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கே.தர்மராஜ் அவருக்கு மருத்துவ உதவி தொகை ரூபாய் 1,00,000 மற்றும் எம்.நடராஜ் அவருக்கு மருத்துவ உதவி தொகை ரூபாய் 50,000 வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த கழக இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே இ பிரகாஷ் ஏற்பாட்டில் ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கிளாம்பாடி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கே.தர்மராஜ் விபத்தில் அடிபட்டு கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ உதவி தொகை ரூபாய் 1,00,000 மற்றும் ஈரோடு மாநகரம் கோட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.நடராஜ் சிறுநீரக பாதிப்பு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவ உதவித்தொகை ரூபாய் 50,000 அவர்களிடம் வழங்கினார்.