செய்தி: சிவானந்தா சுவாமியின் 80- ஆம் ஆண்டு முத்து விழா.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் சிவாசிரமத்தின் மடாதிபதி தவத்திரு சிவானந்த சுவாமியின் 80 ஆம் ஆண்டு முத்து விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் காலையில் கணபதி ஹோமம் மகேஸ்வர பூஜை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கு பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் சுவாமி நித்தியானந்தா முன்னிலை வகித்தார். வி. வேடராஜன் வரவேற்றார். பாஜக மாவட்டப் பார்வையாளர் கே. முரளிதரன், ராமநாதன், தங்கவேல் சுவாமி, ரஞ்சித் சுவாமி, சக்திவேல் சுவாமி உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதில் பக்தர்கள் சிவானந்த சுவாமிக்கு மாலை, மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.