செய்தி: கறிக்கடையை காலி செய்யுமாறு ஊராட்சி தலைவர் சாலை மாணிக்கம் மற்றும் பொன்னுசாமி ஆகியோர் அப்துல்லா குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தை அடுத்த காட்டூரை சேர்ந்தவர் அப்சரா அப்துல்லா. இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கறிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கறிக்கடையை காலி செய்யுமாறும், இஸ்லாமியருக்கு கடை நடத்த உரிமை இல்லை என்றும் கூறி ஊராட்சி தலைவர் சாலை மாணிக்கம் மற்றும் பொன்னுசாமி ஆகியோர் அப்துல்லா குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்சரா அப்துல்லா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தனது குடும்பத்தினருடன் இணைந்து கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.