செய்தி: அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து பொருளூர் வரை செல்லும் அரசு பேருந்து சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி கப்பல்பட்டி வந்தபோது அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்பொழுது அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர் குப்புச்சாமி ஒட்டுநரை தேவத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். துரிதமாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் வேங்கையன், ஊராட்சி செயலர் தங்கராஜ், ஆகியோரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.