செய்தி: டாஸ்மார்க் கடை எண் 8206 கடையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விலைக்கு மேல் அதிகப்படியாக வசூலிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா வண்டிச்சோலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடை எண் 8206 கடையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விலைக்கு மேல் ஐந்திலிருந்து பத்து ரூபாய் வரை அதிகப்படியாக வசூலிக்கப்படுகிறது இது சம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை வண்டிச்சோலை டாஸ்மாக் கடையானது டாஸ்மார்க் உயர் அலுவலகத்திற்கு அருகில் உள்ளது இருந்தும் அதிகாரிகள் இந்த கடையின் விற்பனை ஆளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது வேறு கடைகளில் இருந்து காளி பாட்டில்களை இந்த கடையில் வாங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தமிழக அரசால் அரசு அறிவித்த விலைக்கு மேல் விற்பனை செய்ய கூடாது என்று கடுமையான உத்தரவுகள் இருந்தும் இதுபோன்று ஒரு சில கடைகளில் நடந்து கொள்வதால் அரசாங்கத்திற்கும் அவ பேர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.