செய்தி: அம்மாவின் 76 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் சேலைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் இன்று புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்தநாள் விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கந்திலி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகம் இணைந்து மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அ. ஞானசேகரன் அவர்களின் தலைமையில் அம்மா பேரவை செயலாளர் சிவக்குமார் அவர்களின் முன்னிலையில் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் ராம்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பேரில் கேக் வெட்டி அனைத்து முதியோர்களுக்கும் சேலைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. உடன் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சிவராமன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.