செய்தி: புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் இன்று புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்தநாள் விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அ. ஞானசேகர் தலைமையில் திருப்பத்தூர் நகர செயலாளர் அக்ஷயா முருகன் அவர்களின் ஏற்பாட்டிலன் பேரில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அனைத்து கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.