செய்தி: சமத்துவ மண்ணில்… சாதி கலவரமாக…?. ஏழை பெண்ணுக்கு. நீதி கிடைக்குமா…?.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா காட்டேரி வில்லேஜ் கிராமத்தில் இயங்கிவரும் ஹிரியோடையா கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கணினி பணியாளராக பணிபுரிந்து வந்த சுமித்ரா என்ற பெண்ணை அந்த வங்கியின் முன்னாள் தலைவர் விஸ்வேஸ்வரன் என்றவர் ஜாதி பெயரை காரணம் காட்டி மிகவும் இழிவாக வசைபாடியுள்ளர் இதில் கூட்டுறவு சங்கத்தின் பணிபுரிந்த சுமித்ரா என்ற பெண் தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் உயர் அதிகாரி வங்கி மேலாளர் தட்டி கேட்காமல் வேடிக்கை பார்த்துள்ளார். இது சம்மந்தமாக 23-02-2024 அன்று லவ்டேல் காவல் நிலையத்தில் புகார் அளித்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?..