செய்தி: ரயில்வே சுரங்க பாலம் திறப்பு விழா காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சியில் ரயில்வே சுரங்க பாலம் திறப்பு விழா காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். உடன் ஜோலார்பேட்டை உதவி செயற்பொறியாளர் விகாஷ் யாதவ் ரயில்வே துறை அலுவலர்கள் மற்றும் ரயில்வே துறை பணியாளர்கள் நெக்குந்தி ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா மூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.