செய்தி: ஆண்டிபட்டியில் இந்து இளைஞர் முன்னணி சார்பாக தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் முன்பு இந்து இளைஞர் முன்னணியின் சார்பாக தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து இளைஞர் முன்னணி தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி நகர ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இந்து முன்னணி தேனி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் ஜி, மாவட்டச் செயலாளர் உமையராஜன், பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் கண்ணன் ஜி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. நகர பொருளாளர் பால்பாண்டி நன்றி உரையாற்றினார்.