செய்தி: அ.ம.மு.க.வினர் திருவாரூரில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருவாரூரில் இரயில் நிலையம் முன்பாக தி.மு.க அரசை கண்டித்து மாவட்ட கழக செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். நகர செயலாளர் பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். இதில் அமைப்பு செயலாளர் மலர்வேந்தன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி விவசாய பிரிவு செயலாளர் சங்கர், வர்த்தக பிரிவு செயலாளர் அம்பிகா சங்கர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மன்னார்குடி நகர செயலாளர் ஆனந்தராஜ் உட்பட ஏராளமான அ.ம.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். ஆர்பாட்டத்தின் முடிவில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.