செய்தி: டாக்டர் சந்திரலேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்று யுகேஜி மாணவ மாணவி செல்வங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் சந்திரலேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்று யுகேஜி மாணவ மாணவி செல்வங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் பள்ளியின் தாளாளர் சாம் கமல் ஜூலியஸ் சிறப்பு அழைப்பாளராக காவல்துறை அதிகாரி ரூபி கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆசிரியை ஷாலியா ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, ஆலியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.