செய்தி: நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று க.தர்பகராஜ் இ.ஆ.ப அவர்களை சந்தித்து ஆட்சேபனை தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் திருப்பத்தூர் எல்லைக்குள் அமையாமல் வாணியம்பாடி தாலுகா சின்ன வேப்பம்பட்டு பகுதியில் அமைப்பதை கண்டித்து திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஞானமோகன் தலைமையில் செயலாளர் முத்தமிழ்செல்வி துணைத் தலைவர் பாலமணவாளன் பொருளாளர் சேரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ் இ.ஆ.ப அவர்களை சந்தித்து ஆட்சேபனை தெரிவித்தனர்.