செய்தி: திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா வரும் 27 ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மார்ச் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான ஆடல் வள்ளல் நடராஜர் சுவாமிக்கு பல்வேறு நறுமண பொருட்களால் மற்றும் பழங்களால் நன்னீராட்டல் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.