செய்தி: மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்பகராஜ் இ. ஆ.ப., பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு துவக்க நிகழ்வுகளை மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறு வதை ஒட்டி திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்பகராஜ் இ. ஆ.ப., பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு துவக்க நிகழ்வுகளை மேற்கொண்டார். உடன் மகளிர் திட்ட அலுவலர் பிரியா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.