செய்தி: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் எம். கலியபெருமாள் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகள் சேகரித்தனர்.
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் எம். கலியபெருமாள் திருப்பத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வெங்களாபுரம், விஷமங்கலம் , பேராம்பட்டு, கொரட்டி, எலவம்பட்டி , சு .பள்ளிப்பட்டு , ஆதியூர், போன்ற பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்து வாக்குகள் சேகரித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி. ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர் .