செய்தி: அஇஅதிமுக வேட்பாளர் எம்.கலியபெருமாளை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி வாக்குகள் சேகரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட ஏரிக்கோடி ,திருமால் நகர், பகுதியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.கலியபெருமாளை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி வாக்குகள் சேகரித்தார். இதில் அதிமுக 10 வருட காலம் நல்லாட்சி செய்ததைப் பற்றி பொதுமக்களிடம் கூறிவாக்குகள் சேகரித்தார். உடன் நகர செயலாளர் டி .டி. குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. ஜி. ரமேஷ், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் என். திருப்பதி மற்றும் தொண்டர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.