செய்தி: ஸ்ரீ பெரிய காண்டியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம் பாசூர் கிராமம் முக்குடிவேலம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு தாராபுரம் தேவநல்லூர் மெளனானந்தர் கலைக்குழு ஆசிரியர் கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் நினைவு பரிசும்,அன்னதானமும் வழங்கப்பட்டது…நிகழ்ச்சியினை பிரபு,சந்தோஷ் மற்றும் நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .விழாவினை ஏராளமான ஊர் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்…