செய்தி: ஸ்ரீ அங்கநாதீஸ்வரர் ஆலயம் திருத்தேர் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மடவாளம் கிராமத்தில் ஸ்ரீ அங்கநாதீஸ்வரர் ஆலயம் திருத்தேர் விழா கோலாகலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு தேர் இழுத்தனர். இதில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ் முன்னாள் கவுன்சிலர் எல்.சிவலிங்கம் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு ,கனரா வங்கி ராஜா மற்றும் ஆலய பூசாரிகள் பக்த கோடிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.