செய்தி: மாடப்பள்ளி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு கலசம் வழங்கப்பட்டது. உடன் கோவில் பூசாரி சந்திரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் இருந்தனர்.