செய்தி: திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக நகர கழகம் சார்பில் புரட்சி தமிழர், அஇஅதிமுக கழக பொதுசெயலாளரும், எதிர்கட்சி தலைவரான எடப்பாடியார் ஆணைகினங்க நகர கழக செயலாளர் டி.டி.குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பாஞ்சாலி மைதானம்,பஜார் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.