செய்தி: ஆவடி மாநகராட்சி உட்பட்ட 38வது வார்டு சூரிய காந்தி தெருவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உட்பட்ட 38வது வார்டு சூரிய காந்தி தெருவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.இந்த குப்பை கழிவுநால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் ஏற்படும் பாதிப்பு உள்ளது.இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.