செய்தி: ஈரோடு மாவட்டம் , அம்மாபேட்டை குருவரெட்டியூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை.

ஈரோடு மாவட்டம் , அம்மாபேட்டை குருவரெட்டியூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக தகவல் அறிந்த டிஎஸ்பி .சண்முகம் தலைமையில் காவல் ஆய்வாளர் கலையரசி மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று மது விற்பனை செய்த செல்லவேல் வயது 64, பிரகாஷ் வயது 46 ஆகிய இருவரையும் கைது செய்து சுமார் 400 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.