அருணாசலேஸ்வரர்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும்; அமைச்சர் பேட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுபணிதுறை அமைச்சர் எ வ வேலு , மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும், அறநிலையத்துறை சார்பில் அண்ணாமலையார் திருக்கோவில் ஆய்வு மருத்துவ முகாம், அண்ணாமலையார் திருக்கோயில் வரும் பக்தர்கள் தங்கும் விடுதி திறந்த வைத்து, அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபம் கட்டும் பணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருக்கோவில்கள் வளர்ச்சி பணிகள், வாடகைதாரர்கள் வாடகை குறைப்பு கோரிக்கை மற்றும் 2021 திருக்கார்த்திகை தீபத்திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பார்வையிட்டு, புதூர் செங்கம் மாரியம்மன் கோவிலில் புதிய மண்டபம் கட்டுவது குறித்து ஆய்வு நடத்தி, காஞ்சி கபாலீஸ்வரர் கோவில் ஆய்வு செய்தோம். பின்னர், கழகத் தலைவர் அவர்கள் அறிவித்த கலசப்பாக்கம் தென்மாதிமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்து, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் தல மரக்கன்றுகள் நடப்பட்டு, புதிய அண்ணதான கூடம், வணிக வளாகம் போன்றவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படவேடு ரேணுகாம்பாள் கோவில் குடமுழுக்கு தேதி அறிவித்து, ஆரணி கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி, செய்யாறு முனுகம்பட்டு பச்சையம்மன் கோவில் வணிக வளாகம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர், அறநிலைத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *