சேலம் மாநகர பகுதியில் கரும்பு வழங்குவதில் ஏற்பட்ட தகராறு நியாய விலை கடை பணியாளரை தாக்கிய அதிமுக பிரமுகர்
நியாயவிலைக் கடை பணியாளர் பணி செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சேலம் மாநகர பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள் அடைக்கப்பட்டு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நியாய விலைக்கடை பணியாளர்கள் எச்சரிக்கை .
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சேலம் பெரியபுத்தூர் பகுதியிலுள்ள சந்தனக்காரன் காடு நியாயவிலை கடையில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
அப்பொழுது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் கரும்பு சிறிய அளவில் உள்ளது என்று வேறு கரும்பு நானே எடுத்துக் கொள்கிறேன் என கூறிகடையினுள் நுழைந்துள்ளார்.
இதனால் நியாய விலை கடை பணியாளருக்கும் அதிமுக பிரமுகர் கோபாலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது வாக்குவாதம் முற்றிய நிலையில் நியாயவிலைக் கடை பணியாளரை அதிமுக பிரமுகர் கோபால் தாக்கியுள்ளார்.
இதனால் காத்திருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் நியாயவிலைக்கடை பணியாளரை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய கோரி புகார் அளித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பாதிக்கப்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர் கூறுகையில் நாங்கள் காலை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வந்த நிலையில் அங்கு வந்த கோபால் என்பவர் கரும்பு சிறிய அளவில் உள்ளது என்று கூறி அவரை கடைக்குள் நுழைய முயற்சித்தால் அதனை தடுத்து நிறுத்தியதால் தகாத வார்த்தைகளால் திட்டி ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனைத் தட்டிக் கேட்டதற்கு திடீரென என் சட்டையைப் பிடித்து அடித்துக் கீழே தள்ளினார். மேலும் அவரது அண்ணன் என்னை இந்த கடையில் வேலை செய்ய முடியாது கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் அவர் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மாநகர பகுதியில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளை அடைத்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்