செய்தி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி விழாவை முன்கூட்டியே கொண்டாடினார்கள்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் 15-ஆவது வார்டு அஇஅதிமுக செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் காவேரி செல்வன் ஏற்பாட்டில் ஈரோடு மாநகர் அஇஅதிமுக கிருஷ்ணம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தாலி வழங்கிய அம்மா என்று கோலமிட்டும், அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவை முன்கூட்டியே கொண்டாடினார்கள்.