செய்தி: திருப்பத்தூரில் அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் அம்மாவின் 76ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் இரா.ரமேஷ் தலைமையில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் வழக்கறிஞர்கள் சாமிபழனி,ஒய்.ராஜா,தமிழ்செல்வன், ராதாகிருஷ்ணன், சிவசங்கரி உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.