செய்தி: அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலயத்தில் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம் பாசூர் கிராமம் முக்குடிவேலம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ குன்னுடையான்,தாமரை நாச்சியார்,ஸ்ரீ பொன்னர்,சங்கர்,அத்தை பிள்ளை அத்தான்,ஸ்ரீ மாயவர்,ஸ்ரீ முத்தாயி,தங்காயி,பவளாயி,ஸ்ரீ கன்னிமார் சாமிகள்,ஸ்ரீ மகாமுனி,மந்திரமுனி,சாம்புவன் மற்றும் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய சிலைகளுக்கு யாக சாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால பூஜைகளுடன் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது…
விழாவில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது…