செய்தி: வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் என். திருப்பதி வாக்குகள் சேகரித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செலந்தம்பள்ளி கிராமத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் என். திருப்பதி வாக்குகள் சேகரித்தார். மேலும் செலந்தம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி சரவணன் வேட்பாளருக்கு சிறப்பு பூஜை செய்து மாலை அணிவித்து மலர் தூவி, பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதில் தொண்டர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தினர்.