செய்தி: அந்தியூர் ஊராட்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒன்றியத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,காலமுறை ஊதியம் வழங்குதல், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.