அத்தனை அவமானங்களுக்கும் பதில்.. விளாசிய இஷான் கிஷன்.. வெற்றியுடன் ரன் ரேட்டை எகிற வைத்த மும்பை
ஷார்ஜா: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், மும்பை அணி 10 பத்து ஓவர்களுக்கு உள்ளாகவே போட்டியை முடித்து வென்றுள்ளது
அடுத்தடுத்து விக்கெட்ஸ்
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், சென்னைக்கு எதிராக அரைசதம் அடித்து விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 12 ரன்களில் கோல்டர் நைல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். பிறகு, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் பும்ரா ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, ‘இதோ வந்துட்டேன்’ என்று கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து அவசர அவசரமாக நடையைக் கட்டினார். 41 ரன்களுக்கெல்லாம் அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பிறகு டூபேவும் 3 ரன்களில் அவுட்டாக, நான்காவது விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். சென்னையை வெளுத்த அத்தனை வீரர்களும் 10 ஓவர்களுக்குள் அவுட்டாகி வெளியேறினார்கள். இதன் பிறகு, ராஜஸ்தான் அணியால் கடைசி வரை மீண்டு வர முடியவில்லை. க்ளென் ஃபிலிப்ஸ் வெறும் 4 ரன்களில், கோல்டர் நைல் ஓவரில் போல்டாக, ராஜஸ்தான் 50 ரன்களுக்கெல்லாம் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. அதவாது, 13 ஓவர்களுக்கு அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.