ஆபீஸ் வரீங்களா, இல்ல டிஸ்மிஸ் பண்ணட்டுமா..? ஊழியர்களை மிரட்டும்
உலகம் முழுவதும் அனைத்து நிறுவனங்களும் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ரத்து செய்து ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. ஆனால் இன்னும் சில நிறுவனத்தில் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள், இது நிர்வாகத்திற்கு வருமான பாதிப்பு அதிகமாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் பெரிய பிரச்சனையாக தெரிகிறது.
இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் return-to-office கொள்கையை கடுமையாக பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் அலுலகம் வராத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் மெட்டா ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மெட்டா நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவரான Lori Goler சார்பாக அனைத்து ஊழியர்களுக்கும் return-to-office கொள்கையை குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் விளக்கம் அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
ரவுண்ட் ஆரம்பம்..! மேலும் இதை ஒவ்வொரு ஊழியர் அடிப்படையில் மாதாந்திர அடிப்படையில் நிர்வாகம் கண்காணிக்கும், மேலும் ஊழியர்கள் வருகையை அனைத்து மேனேஜர்களும் பேட்ஜ் மற்றும் ஸ்டேட்டஸ் டூலில் அப்டேட் செய்து டிராக் செய்ய வேண்டும். இந்த விதிமுறையை கடைப்படிக்காத ஊழியர்கள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் வருகிற செப்டம்பர் 5 முதல் in-person Time Policy நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, இதன் மூலம் 3 வாரத்திற்கு குறைவான வருகை பதிவு கொண்ட ஊழியர்கள் மீது கட்டாயம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த விதிகளை தொடர்ந்து கடைபிடிக்காமல் மீறுபவர்கள் கட்டாயம் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, சரி செய்யாத பட்சத்தில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக மெட்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
