இந்தோனேசியா பிடித்துள்ள கன்னியாகுமரி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் அறிக்கை
சென்னை=10/03/2022=10=18am
இந்தோனேசியா அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க சென்றபோது இந்தோனேசியா கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் இதுபோல் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதும், படகுகளை சேதப்படுத்துவதும் வழக்கமாகி வருகிறது. இச்செயல் தமிழக மீனவர்கள் இடையே தொடர்ந்து மிகுந்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை உடனடியாக இந்தோனேசியா அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகான மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.