/*! Select2 4.0.6-rc.1 | https://github.com/select2/select2/blob/master/LICENSE.md */ (function(){if(jQuery&&jQuery.fn&&jQuery.fn.select2&&jQuery.fn.select2.amd)var e=jQuery.fn.select2.amd;return e.define("select2/i18n/bs",[],function(){function e(e,t,n,r){return e%10==1&&e%100!=11?t:e%10>=2&&e%10<=4&&(e%100<12||e%100>14)?n:r}return{errorLoading:function(){return"Preuzimanje nije uspijelo."},inputTooLong:function(t){var n=t.input.length-t.maximum,r="Obrišite "+n+" simbol";return r+=e(n,"","a","a"),r},inputTooShort:function(t){var n=t.minimum-t.input.length,r="Ukucajte bar još "+n+" simbol";return r+=e(n,"","a","a"),r},loadingMore:function(){return"Preuzimanje još rezultata…"},maximumSelected:function(t){var n="Možete izabrati samo "+t.maximum+" stavk";return n+=e(t.maximum,"u","e","i"),n},noResults:function(){return"Ništa nije pronađeno"},searching:function(){return"Pretraga…"}}}),{define:e.define,require:e.require}})(); மக்கள் நம்பிக்கை - Tamil News, Breaking News in Tamil- தமிழ் செய்திகள், பிரேக்கிங் நியூஸ் தமிழ் ஊட்டி:பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சு - Makkal Nambikkai

ஊட்டி:பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சு

ஊட்டி=11/03/2022=12=30am

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அதிகாரி பூபதி வரவேற்றார்.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் விலை கொடுத்து எந்த பொருள் வாங்கினாலும் நுகர்வோர் தான். எடை குறைவு, காலாவதியான பொருட்கள் வினியோகித்தல் போன்றவற்றால் ஏமாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் விலை கொடுத்து வாங்குகிறோம் என்று உணர வேண்டும்.

நுகர்வோர் உரிமைகள் குறித்து தெரிந்து கொண்டு கடை விற்பனையா ளரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். ஆன்லைனில் பரிசுடன் பொருட்கள் விற்பனை என்பதை பார்த்து பலர் தேடிப் போய் பொருட்கள் வாங்குகின்றனர். நவீன காலத்தில் பலர் தாங்களாகவே ஏமாந்து வருகின்றனர்.

விற்பனை பொருட்களில் கலப்படம், தரமற்றது போன்றவற்றால் உடலுக்கு உபாதைகள் ஏற்படும். இதனை விற்கக்கூடாது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால் புகார் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் பேசும்போது, தரமற்ற உணவு பொருட்களால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுதல் அல்லது இறப்பு சம்பவங்கள் நடந்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு தொகை பெற சட்டத்தில் இடம் உள்ளது என்றார்.

தேசிய நுகர்வோர் தினத்தை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்.

மேலும் எடை அளவுகள், தடை செய்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. விழாவில் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *