எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சிறப்பு முகாம்
சேலம் வீரபாண்டி ஒன்றியம் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் பெரியார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 06.01. 2022 முதல் 12.01. 2022 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.இந்த சிறப்பு முகாமினை வீரபாண்டி ஒன்றியம் வேளாண்மை மேலாண்மை குழு தலைவர் வெண்ணிலா சேகர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரியின் முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை உரை நிகழ்த்தினார்.இதில் சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலை கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கலந்து கொண்டு நாட்டு நலத் திட்ட பணியை பற்றி விளக்கிக் கூறினார்.
இம்முகாமில் மரக்கன்று நடுதல் பள்ளி கட்டிடத்திற்கு வெள்ளை அடித்தல் மற்றும் சுற்றுப்புறம் சுத்தம் செய்தல்,கொரோனா மற்றும் டெங்கு நோய், தடுப்பு விழிப்புணர்வு,குழந்தை திருமணம் தடுப்பு பற்றிய சிறப்பு கருத்தரங்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மது மற்றும் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு, பள்ளி குழந்தைகளுக்கு கலை இலக்கிய போட்டி மற்றும் கல்வி பற்றிய கருத்தரங்கம் ஆகியவை முகாமில் முதன்மை பணிகளாக நடைபெற உள்ளது.
முகாமில் பிரேமலதா சதீஷ்குமார், வடிவேல் ,சாஸ்தா, கலாராணி, அன்பழகன், கலா ரவி ,சீனிவாசன்,வேங்கையன், மற்றும் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இம் முகாம் நடைபெறும் ஏழு நாட்களுக்கும் பெருமாகவுண்டம்பட்டி தலைவர் பிரேமலதா சதீஷ்குமார் அனைவருக்கும் மதிய உணவு வழங்குகிறார்.