ஏவிஎஸ் கல்லூரி மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா
சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் இருந்து 27 12 2020 அன்று துருக்கியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வலுதூக்கும் போட்டியில் ஏவிஎஸ் பொரியல் கல்லூரியின் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு மாணவர் சேக் முகமது அலி (66 எடைப் பிரிவில் )மொத்தம் 650 கிலோ தூக்கி தங்க பதக்கம் வென்றார்.
மற்றும் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு மாணவி இலக்கியா (52 எடைப்பிரிவில்)மொத்தம் 347.5 கிலோதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதனைத் தொடர்ந்து ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியின் தலைவர் கைலாசம், செயலாளர் ராஜநாயகம், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.
மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் மற்றும் துணை முதல்வர் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர் வடிவேல் மற்றும் சேலம் மாவட்ட வலுதூக்கும் பயிற்சியாளர் பொன்சடையன், சேலம் மாவட்டம் பளுதூக்கும் சங்கத் துணைத் தலைவர் தாதை தனசேகரன், சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்க துணைத் தலைவர் துறை இராமச்சந்திரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.
மேலும் காமன்வெல்த் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற உள்ளது அதில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சாதனைகளைப் புரிய தமிழகமுதல்வர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்கள்.மற்றும் தங்கள் அரசுப் பணியில் வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள் தங்களது பயிற்சிக்காகவும் மற்றும் பயண செலவுகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் இந்தியாவிற்காக தமிழகத்தின் சார்பில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று மாணவர்கள் உறுதி அளித்து உள்ளார்கள்.