கனரக, ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
கனரக, ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு
இலவச கண் சிகிச்சை முகாம்
காட்பாடி ரெட்கிராஸ். இந்தியா விஷன் கண்பரிசோதனை மையம் மற்றும் வினயா ஆயுர் வேதிக் கேர் மையம் சார்பில்
உதவி ஆட்சியர் அ.காமராஜ் தொடக்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட கிளையின் இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும், இந்தியா விஷன் கண்பரிசேதனை மையம், காட்பாடி வினயா ஆயுர் வேதிக் கேர் மையமும் இணைந்து கனரக, ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் 31.12.2021 காலை 9 மணி முதல் பிற்பகல் வரை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆட்சியர் அ.காமராஜ் அவர்கள் முகாமினை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. இது போன்ற கண் பரிசோதனைகள் மேற்கொள்வது பாராட்டுதலுக்குரியது குறிப்பாக ஆட்டோ, கார், இரு சக்ர வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஓட்டுநர்கள் கவனாக வாகனங்களை ஓட்டவும் கண்பார்வை அவசியம் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பரிசோதனை முகாம் நடக்கிறது. அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அன்போது கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இது கரோனா நோய் பரவல் உள்ள காலமாக உள்ளது எனவே அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பின்பற்றி அவ்வப்போது கைகளை சுத்தம் செய்துக்கொண்டு கரோனா பரவலை தடுப்போம் என்றார்.
இந்தியன் விஷன் கண் பரிசோதனை மையத்தின் ஆலோசகர் மேரி, துளசி, வினயா ஆயுர்வேதிக் கேர் மையத்தின் இயக்குநர் கே.அறிவுமணி, ஆலோசகர் எஸ்.செண்பகம் ஆகியோர் கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
அவை துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி, ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, ஆனந்த், எஸ்.சுரேஷ்மனோகர், கே.அந்தோனி பாஸ்கரன், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், எஸ்.மோதகப்பிரியன், ஆர்.அஜய்குமார், எம்.எஸ்.கலையரசன், ஆனந்த் ஜேசீஸ் சங்க தலைவர் எஸ்.வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த முகாமில் ஆட்டோ ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றுள்ள பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து இலவச பரிசோதனைகளை செய்து கொண்டனர் சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் இருநூறு பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.