கன்டென்ட் முக்கியமா? சைலன்ட்டா ஜெயிக்கணுமா? – பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள்?
வாயைத் திறந்தாலே கன்டென்ட்டாக தான் இருக்கவேண்டும் என்று 3 வருடமாகத் தன்னை தயார்செய்து வந்ததுபோல இருக்கிறது அபிஷேக் பெர்ஃபாமன்ஸ்.

பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, போட்டியாளர்களைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகமாக இருந்தன. ஆனால், வழக்கமான பேட்டர்னை விட்டு வெளியே வந்து, இம்முறை இளைஞர்களின் பங்கு அதிகமாக உள்ளது.
அதனால், பல சுவாரசிய விளையாட்டுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பிக் பாஸின் டாஸ்க்காகவும் இருக்கலாம் அல்லது போட்டியாளர்களுக்குள்ளேயே ஏற்படும் ஸ்ட்ராடஜியாகவும் இருக்கலாம். பொதுவாக நிகழ்ச்சியின் முதல் நாள், 16 போட்டியாளர்களைத்தான் காலத்தில் இறங்குவார்கள். ஆனால், இம்முறை 18 பேர் ஆரம்பத்திலேயே களத்தில் உள்ளனர். அதிலும், பாதிப் பேர் அறிமுகமில்லாத முகங்கள்.