கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பழைய ஜெயங்கொண்டம் பொங்கல் பரிசு தொகுப்பு
12/01/2022
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் தமிழக அரசின் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் அணி பொறுப்பாளர் அம்பிகாபதி, கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, பழையஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.