கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வீரராக்கியத்தில் சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில் 32-வது உலக மகளிர் தின விழா
கரூர்=10/03/2022=12=01am
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வீரராக்கியத்தில் சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில் 32-வது உலக மகளிர் தின விழாவில் செயலாளர் கிறிஸ்டினா சாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை ஜானகி வரவேற்புரையாற்றினார், மஞ்சுளா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு, சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கூறப்பட்டது. பெங்களூரை சேர்ந்த பெண்ணியப் போராளி லூசி கருத்துரை வழங்கினார்.
“சமத்துவ எழுத்தாளர்” என்னும் விருதினை மதுரையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திருமலை என்பவருக்கும் வழங்கப்பட்டது. இவர் மண் மக்கள் அறன், சமூக மற்றும் பெண் பாதுகாப்பு குறித்து 42 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார்,
இதில் இவர் எழுதிய புத்தகங்களுக்கு பல விருதுகளும் பெற்றுள்ளார். நிகழ்ச்சியில் பாக்கியம் மகளிர் தின தீர்மானங்களை வாசித்தார் அவை பின்வருமாறு,
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் மனித குலத்திற்கு எதிரானது எனவே உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் எனவும், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தத்தையும் உயிரை விட மக்களுக்கு இரங்கலையும் தெரிவித்தனர்.
கல்வி நிலையங்கள், பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருவது மற்றும் தற்கொலை,கொலைகள் அதிகரித்து வருவதால் அரசு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டி தீர்மானித்தனர் .
சமூக சீரழிவுக்கு பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்புக்கு முக்கிய காரணமான மது பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் மதுக்கடைகளை மூடி தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தீர்மானித்தனர்.
கணவனை இழந்தவர்கள் கைவிடப்பட்டவர்கள் விவாகரத்தான பெண்கள் இவர்களுக்கு தனி அமைச்சகம் நிறுவி நிவாரணம் மற்றும் பாதுகாப்பு நலத்திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் விவசாயத்தையும் குடிநீரையும் காக்க மணல் அள்ளும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் டெக்ஸ்டைல், கொசுவலை மற்றும் தனியார் நிறுவனங்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தெரியப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு குழு நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
பெரும்பான்மை மக்கள் மேலும் வறுமைக்கு தள்ளும் சமையல் எரிவாயு பெட்ரோல் மற்றும் டீசல் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உழைக்கும் மக்கள் சாசனம் தேசிய துறைத்தலைவர் சாமி, சமம் குடிமக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் ராஜன், கௌரி, பஞ்சாயத்து தலைவிகள், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மதுரையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திருமலைக்கு சமத்துவ எழுத்தாளர் என்னும் விருதினை சுவாதி பெண்கள் இயக்க செயலாளர் கிறிஸ்டினா சாமி வழங்கினார்.