கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து ரூபாய் 20 லட்சம் பணம் மற்றும் 30 செல்போன் மற்றும் 400 சிம்கார்டுகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கிருஷ்ணா நகர்ப்பகுதியில் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததும் உடனடியாக டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை மற்றும் சைபர் கிரைம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாட்டம் நடைபெற்ற வீட்டை சுற்றிவளைத்தனர். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர் வைத்துக்கொண்டு சிலர் ஆன்லைனில் பந்தயம் கட்டி விளையாடி கொண்டு இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள க. செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பெயரில் வீடு வாடகைக்கு எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளான சந்திரசேகர் கிருஷ்ணமூர்த்தி கோகுல்ராஜ் மணிவேல் அரவிந்த் பிரகாஷ் மணிகண்டன் மற்றும் பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆக பயன்படுத்திய கம்ப்யூட்டர் எல் இ டி டிவி மோடம் 30 செல்போன்கள் 400 சிம் கார்டுகள் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சூதாட்டம் மூலம் சம்பாதித்த 20 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவர் பல இடங்களில் சொத்துக்கள் வாங்க வைத்துள்ளதாகவும் இந்தியா முழுவதும் மாற்றியதாகவும் தெரியவருகிறது. மேலும் கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *