கழுகுமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேஷ்டி சேலை வழங்கினார் கடம்பூர் ராஜூ
11/01/2022
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பொங்கல் பரிசு வேஷ்டி சேலை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் உள்ள ஸ்ரீ கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து கழுகுமலையில் உள்ள ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலையில் கடை எண் 1 மற்றும் கடை எண் 2 உள்ள 1990 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வேட்டி சேலைகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
இதையடுத்து கழுகுமலை பேரூராட்சி உள்ள கீழக்குளம் ஊரணி தூர்வாரி கரையை பலப்படுத்தி கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புக்கு 2019-2020 ஆம் ஆண்டு மூலதனம் மானியத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் மதிப்பில் கீழக்குளம் ஊரணி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
இதுபோல் கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சிவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கழுகுமலை பகுதியில் பத்து நாளைக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதாகவும் 1 குடம் தண்ணீர் 12 ரூபாய் விலை கொடுத்து வாங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் முருகனிடம் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தி இதற்கு முன்பு போல் ஐந்து நாளைக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் முத்துராஜ்,முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்,மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன்,வர்த்தக அணி தலைவர் காமராஜ்,வேலாயுதபுரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுப்புராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.